வாக்கு எண்ணும் மையத்தை டி.ஐ.ஜி. ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தை டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 22 Feb 2022 12:35 AM IST (Updated: 22 Feb 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை மதுரை சரக டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

சிவகாசி, 
சிவகாசி அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை மதுரை சரக டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார். 
பாதுகாப்பு பணி 
சிவகாசி மாநகராட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட 111 வாக்கு எந்திரங்கள் சிவகாசி அரசு கல்லூரியில் வைக்கப்பட்டு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு முக்கிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நேற்று நடைபெற்றது. கல்லூரியை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த காவல்துறையினர் கல்லூரியின் நுழைவு வாயில் பகுதியில் தடுப்பு அமைத்து உரிய அடையாள அட்டை உள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். 
டி.ஐ.ஜி. ஆய்வு 
வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பணிகளை செய்து வரும் ஊழியர்கள் அனைவரையும் போலீசார் வீடியோ எடுத்த பின்னரே வாக்கு எண்ணும் கட்டிடத்திற்குள் அனுமதித்தனர். வாக்கு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
இதனை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு சென்றனர். இதற்கிடையில் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி நேற்று மதியம் அரசு கல்லூரிக்கு வந்தார். 
அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விளக்கினார்.
ஆலோசனை 
வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூடி நிற்க வாய்ப்பு தராமல் தனித்தனியாக பிரிந்து நிற்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தினார். வாக்கு எண்ணிக்கை முடிந்த வார்டுகளை சேர்ந்த வேட்பாளர்களை உடனே வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

Next Story