ஹிஜாப் விவகாரத்தை பெரிதுபடுத்தியதற்கு ஆளுங்கட்சி அழுத்தம் தான் காரணம்


ஹிஜாப் விவகாரத்தை பெரிதுபடுத்தியதற்கு ஆளுங்கட்சி அழுத்தம் தான் காரணம்
x
தினத்தந்தி 22 Feb 2022 12:44 AM IST (Updated: 22 Feb 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் நடந்த ஹிஜாப் விவகாரத்தை பெரிதுபடுத்தியதற்கு ஆளுங்கட்சி அழுத்தம் தான் காரணம் என பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு அராஜகத்தை அரங்கேற்றி உள்ளது. பணபலம், அதிகார பலம், ஆள் பலம் ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை களத்திலிருந்து கரையேற்ற கூடிய வேலையில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் பிற கட்சியினர், வேட்பாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேலூர் தேர்தலில் வாக்குச்சாவடி பா.ஜ.க. முகவர் செய்ததில் தவறில்லை. எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால், தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா?
நாளை (அதாவது இன்று) வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரிதான். சரியான தேர்தல் நடைமுறையாக தெரியவில்லை. மேலூர் ஹிஜாப் விவகாரத்தை பெரிதுபடுத்தியதற்கு ஆளுங்கட்சியின் அழுத்தம்தான் காரணம். இவற்றையெல்லாம் மீறி பா.ஜ.க. மிகச்சிறந்த வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story