வீடுபுகுந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு
மார்த்தாண்டத்தில் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் வீடுபுகுந்து கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் வீடுபுகுந்து கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாக்குச்சாவடியில் மோதல்
குழித்துறை நகராட்சி தேர்தல் கடந்த 19 -ந் தேதி நடைபெற்றது. அப்போது மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 12-வது வார்டு வாக்கு சாவடியின் வெளியே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு மார்த்தாண்டம் மெயின் ரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் டி.ஒய்.எப்.ஐ. மார்த்தாண்டம் வட்டார செயலாளர் ஜினு ஜெரால்டு வீட்டில் ஒரு கும்பல் நுழைந்தது. அந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்து சூறையாடியது.
மேலும், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி ெசன்றது. வாக்குச்சாவடி வெளியே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
11 பேர் மீது வழக்கு
இது குறித்து ஜினு ஜெரால்டின் தந்தை டென்னிசன் மார்த்தாண்டம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், குழித்துறை சுண்டபொற்ற விளையை சேர்ந்த சுரேஷ் (வயது53) உள்பட 11 பேர் நள்ளிரவு வீட்டு காம்பவுண்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் கம்பி மற்றும் இரும்பு குழாயால் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று சமையலறை, ஜன்னல் கண்ணாடி ஆகியவற்றை உடைத்தனர். மேலும், வீட்டின் முன்பக்கம் நின்ற கார் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்றனர், என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் சுரேஷ் உள்பட 11 பேர் மீது மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story