தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த தடுப்புகள் அகற்றம்
சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் எதிரே பெரியார் மேம்பாலத்தையொட்டி சாலையோரம் சேதமடைந்த தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த தடுப்புகள் அங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் வளர்வதற்கும் இடையூறாக இருந்தன. இது பற்றிய செய்தி நேற்று தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த தடுப்புகளை அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
கண்ணன், சேலம்.
குடிநீர் தட்டுப்பாடு
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் அக்கரைபாளையம் ஊராட்சி 5-வது வார்டில் பாலம்பட்டி உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. அங்குள்ள பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5-வது வார்டு பொதுமக்கள், அக்கரைபாளையம், வீரபாண்டி.
சுகாதார சீர்கேடு
சேலம் பழைய பஸ் நிலையத்தில் தற்போது புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பஸ் நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களில் சிலர் கழிப்பறையை பயன்படுத்தாமல் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கிறார்்கள். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், கிச்சிப்பாளையம், சேலம்.
நாமக்கல் 13-வது வார்டில் உள்ளது அஜிஸ் தெரு. இந்த தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்ைல. உடனடியாக சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
பொதுமக்கள், அஜிஸ் தெரு, நாமக்கல்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனியில் தாஜ் நகர் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பை தொட்டி உள்ளது. இந்நிலையில் அந்்த பகுதியினர் குப்பைகளை தொட்டியில் போடாமல் ரோட்டிலேயே வீசி செல்கிறார்கள். மேலும் குப்பைகளை அள்ளுவதில்லை. இதனால் அந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. குப்பைகளை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்தி, எஸ்.பி.பி. காலனி, பள்ளிபாளையம்.
போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படுமா?
கிருஷ்ணகிரி நகர்ப்புற மைய பகுதிகளாக காணப்படும் சென்னை, பெங்களூரு, கிளை சிறைச்சாலை ரோடு போன்ற சாலைகள் எப்போதுமே வாகன நெரிசல் காணப்படும் பகுதியாகும். குறிப்பாக இந்த சாலைகளில் இரு புறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிகளில் சாலையில் வாகனங்களை நிறுத்துபவர்களிடம் அறிவுறுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும்.
-ஆர்.சந்துரு, கிருஷ்ணகிரி.
சாக்கடை கால்வாய் வேண்டும்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சி கிராமம் பழனியப்பார் கோவில் ரோட்டில் மாதா கோவில் அருகில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் சாக்கடை நீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. எனவே அந்த பகுதியில் வசிப்பவர்கள், ரோட்டில் செல்வோருக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் இந்த தெருவில் சாக்கடை வசதி இதுநாள் வரை செய்து தரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், பேளூக்குறிச்சி, நாமக்கல்.
அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் ஏற்கனவே சாலை போக்குவரத்தை சரிசெய்ய மேம்பாலங்கள் கட்டப்பட்டிருந்தும் போக்குவரத்து நெரிசல் குறைய வில்லை. இதனால் அந்த வழியாக அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல மிகவும் கடினமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், சீலநாயக்கன்பட்டி, சேலம்.
மதுப்பிரியர்கள் தொல்லை
சேலம் சின்னத்திருப்பதி அருகே ௨ள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான காலியிடத்தில் தினமும் இரவில் மதுப்பிரியர்கள் மது அருந்துகிறார்கள். மேலும் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு அந்த பகுதி மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். இதனால் பெண்கள் அந்த வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
-ஊர்மக்கள், சின்னத்திருப்பதி, சேலம்.
Related Tags :
Next Story