நெல்லை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 72 நுண்பார்வையாளர்கள் நியமனம் கலெக்டர் விஷ்ணு தகவல்
வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 72 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 72 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
கலெக்டர் விஷ்ணு ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. இங்கு வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உடனிருந்தார்.
பேட்டி
இதை தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க நெல்லை மாநகராட்சிக்கு ஒரு மண்டலத்திற்கு 3 பேர் என 12 நூண்பார்வையாளர்களும் மற்றும் ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 பேர் என மொத்தம் 72 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு பணிகளை செய்வார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு அதிகபட்சமாக மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மட்டும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். முககவசம் அணிந்து இருக்க வேண்டும். தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story