வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருந்தால் சாட்சியிடம் உரிய வாக்குமூலம் பெறுவது எப்படி?மதுரை ஐகோர்ட்டு கேள்வி


வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருந்தால் சாட்சியிடம் உரிய வாக்குமூலம் பெறுவது எப்படி?மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 22 Feb 2022 1:58 AM IST (Updated: 22 Feb 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருந்தால் சாட்சியிடம் உரிய வாக்குமூலம் பெறுவது எப்படி? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை, ப

வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருந்தால் சாட்சியிடம் உரிய வாக்குமூலம் பெறுவது எப்படி? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

விசாரணை

மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி. இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக போலீசார் அவரை கைது செய்து, குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் இவர் தனக்கு ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மீது கடந்த 2005-ம் ஆண்டு பதிவு செய்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முறையாக போலீசார் விசாரித்து முடிக்காமல் உள்ளனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

பெறுவது எப்படி?

இதையடுத்து நீதிபதி, “மனுதாரர் மீது கொலை, கொள்ளை என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்குகளை போலீசார் ஏன் முறையாக விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை? இதுபோல போலீசார் அலட்சியமாக இருந்தால், நீண்ட காலமாக இருக்கும் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் உரிய வாக்குமூலத்தை எப்படி பெறுவது? ஒரு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால், அந்த வழக்கின் சாட்சிகளில் சிலர் இறந்திருக்கலாம். இப்படிப்பட்ட வழக்குகளின் நிலை என்ன ஆகும்?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் “போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் என்பது பெயரளவில்தான் நடைபெறுகிறதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், மனுதாரர் குறித்த அனைத்து தகவல்களையும் வருகிற 13-ந்தேதி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story