திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பூக்கள்
பூச்சொரிதல் விழாவில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் டன் கணக்கில் பூக்கள் குவிந்தன
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் பலர் ஊர்வலமாக பூக்களை கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளில் அம்மன் படத்தை வைத்து பல்வேறு வாகனங்களிலும் தட்டுகளிலும் பூக்களை எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை முதல் விடிய, விடிய வரை பக்தர்கள் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றினர். இந்த பூக்கள் அனைத்தையும் நேற்று அதிகாலை முதல் பிரிக்கும் பணி நடைபெற்றது. இவை அனைத்தையும் மொத்தமாக மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில் மூலஸ்தான அறை, அதற்கு அடுத்த அறை, அதனை தொடர்ந்து உள்ள வளாகம் வரை பூக்கள் குவிந்தன.
டன் கணக்கில் குவிந்த பூக்கள்
அம்மன் சன்னதியில் அம்மனின் முகம் மட்டும் தெரியும் அளவில் இருந்தது. குவிந்த பூக்கள் டன் கணக்கில் இருக்கும் என கோவில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. பூக்கள் அனைத்தும் அம்மனுக்கு சாற்றப்பட்ட பின் நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டன. காலை 9 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இ
Related Tags :
Next Story