மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது


மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2022 2:11 AM IST (Updated: 22 Feb 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

வடகாடு
வடகாடு அருகே உள்ள கரு கீழத்தெரு அரங்குளமஞ்சு பகுதியில், ஒரு சிலர் மணல் அள்ளி கடத்த முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கரு மேலவட்டம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் மணலை அள்ளி டிராக்டரில் ஏற்றி கடத்த முயன்றது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து மணல் அள்ளி கடத்த முயன்ற தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (வயது 22) மற்றும் பட்டுக்கோட்டை வட்டம் நெய்வேலி தென்பாதி பகுதியை சேர்ந்த முருகானந்தம் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story