21 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது


21 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது
x
தினத்தந்தி 22 Feb 2022 7:49 PM IST (Updated: 22 Feb 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நகராட்சியை 21 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது

கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சியை 21 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கைப்பற்றியது. திருச்செந்தூர் நகராட்சியிலும் வெற்றி வாகை சூடியது. 
கோவில்பட்டி நகராட்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் உள்ளன. இதில் கோவில்பட்டி, திருச்செந்தூர் நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. காயல்பட்டினத்தில் சுயேச்சைகள் அதிகளவில் வெற்றி பெற்று உள்ளனர். 
கோவில்பட்டி நகராட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தேர்தல் அதிகாரியும், நகரசபை ஆணையாளருமான ராஜாராம் முன்னிலையில் எண்ணப்பட்டன. அதில், கோவில்பட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 36 தி.மு.க. 19 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றி உள்ளது. இதுதவிர அ.தி.மு.க. 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 5 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜனதா, அ.ம.மு.க. தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர். 
கோவில்பட்டி நகராட்சி தலைவராக தி.மு.க. மொழிப்போர் தியாகி பெரியநாயகம் தமிழரசன் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அதன்பிறகு 21 ஆண்டுகள் கழித்து தற்போது கோவில்பட்டி நகராட்சி தி.மு.க. வசமாகி உள்ளது. 
வெற்றி பெற்றவர்கள் விவரம்
கோவில்பட்டி நகராட்சியில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு - கனகலட்சுமி (தி.மு.க.), 2-வது வார்டு - செண்பகவல்லி (தி.மு.க.), 3-வது வார்டு கருப்பசாமி - (அ.ம.மு.க.), 4-வது வார்டு சித்ரா (தி.மு.க). 5-வது வார்டு - லவராஜா (சுயே.), 6-வது வார்டு - முத்துராஜ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 7-வது வார்டு சண்முகவேல் (தி.மு.க.), 8-வது வார்டு - சுரேஷ் (தி.மு.க.), 9-வது வார்டு - மகபூப் ஜெரீனா (தி.மு.க.), 10-வது வார்டு முத்துலட்சுமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு). 11-வது வார்டு - ஆர்.எஸ்.ரமேஷ் (ம.தி.மு.க.), 12-வது வார்டு - உமா மகேஸ்வரி (அ.தி.மு.க.), 13-வது வார்டு - சித்ராதேவி (தி.மு.க.), 14-வது வார்டு தவமணி (தி.மு.க.), 15-வது வார்டு - மணிமாலா (ம.தி.மு.க.), 16-வது வார்டு - கருணாநிதி (தி.மு.க.), 17-வது வார்டு - சரோஜா (இந்திய கம்யூனிஸ்டு), 18-வது வார்டு - விஜயா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 
19-வது வார் விஜயன் (சுயே.), 20-வது வார்டு - விஜயகுமார் (பா.ஜனதா), 21-வது வார்டு உலகராணி (தி.மு.க.), 22-வது வார்டு - ஜாஸ்மின் லூர்து மேரி (தி.மு.க.), 23-வது வார்டு - சுதாகுமாரி (சுயே.), 24-வது வார்டு - செண்பகமூர்த்தி (அ.தி.மு.க.), 25-வது வார்டு - மாரியம்மாள் (தி.மு.க.), 26-வது வார்டு - வள்ளியம்மாள் (அ.தி.மு.க.), 27-வது வார்டு - ஜோதிபாசு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 28-வது வார்டு - முத்துலட்சுமி (தி.மு.க.), 29-வது வார்டு - கருப்பசாமி (தி.மு.க.), 30-வது வார்டு - புவனேஸ்வரி (தி.மு.க.), 31-வது வார்டு - சீனிவாசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 32-வது வார்டு கவியரசன் (அ.தி.மு.க.), 33-வது வார்டு - சண்முகராஜ் (தி.மு.க.), 34-வது வார்டு - ராமர் (தி.மு.க.), 35-வது வார்டு - ஏஞ்சலா (தி.மு.க.), 36-வது வார்டு கனகராஜ் (தி.மு.க.). 
திருச்செந்தூர் நகராட்சி
திருச்செந்தூர் நகரசபையில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 21 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 
1-வது வார்டு - ஏ.பி.ரமேஷ் (தி.மு.க.), 2-வது வார்டு - ஆ.செந்தில்குமார் (தி.மு.க.), 3-வது வார்டு - அந்தோணி ட்ரூமன் (தி.மு.க.), 4-வது வார்டு தினேஷ் கிருஷ்ணா (தி.மு.க.), 5-வது வார்டு - மா.சுதாகர் (தி.மு.க.), 6-வது வார்டு மு.சூரியகலா (சுயே.), 7-வது வார்டு - கா.கவுரி (தி.மு.க.), 8-வது வார்டு - செ.கிருஷ்ணவேணி (காங்கிரஸ்), 9-வது வார்டு - சு.கண்ணன் (தி.மு.க.), 10-வது வார்டு - செ.அரச்சனா (சுயே.), 11-வது வார்டு - நா.ராமன் (தி.மு.க.), 12-வது வார்டு - அ.சாரதா (தி.மு.க.), 13-வது வார்டு - சு.முத்துகுமார் (தி.மு.க.), 14-வது வார்டு - கோ.ரேவதி (தி.மு.க.), 15-வது வார்டு - சோமசுந்தரி (தி.மு.க.), 
16-வது வார்டு - நெ.ஆனந்தராமச்சந்திரன் (தி.மு.க.), 17-வது வார்டு வ.வேலம்மாள் (அ.தி.மு.க.), 18-வது வார்டு - நா.ஆறுமுகம் (தி.மு.க.), 19-வது வார்டு - சா.மகேந்திரன் (தி.மு.க.), 20-வது வார்டு - அ.முத்துஜெயந்தி (தி.மு.க.), 21-வது வார்டு - பா.முத்துகிருஷ்ணன் (தி.மு.க.), 22-வது வார்டு - ஈ.லிங்கசெல்வி (சுயே.), 23-வது வார்டு - செ.சாந்தி (அ.தி.மு.க.), 24-வது வார்டு - ர.சிவஆனந்தி (தி.மு.க.), 25-வது வார்டு - லா.செல்வி (தி.மு.க.), 26-வது வார்டு - தொ.மஞ்சுளா (தி.மு.க.), 27-வது வார்டு - செ.லீலா (தி.மு.க.).
காயல்பட்டினம் நகராட்சி
காயல்பட்டினம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் அதிக இடங்களில் அதாவது 14 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். தி.மு.க.வுக்கு 4 இடங்கள் கிடைத்து உள்ளன.
1-வது வார்டு - மாரீஸ்வரி (தி.மு.க.), 2-வது வார்டு - முருகன் (சுயே.), 3-வது வார்டு - கதிரவன் (தி.மு.க.), 4-வது வார்டு - தஸ்நேவிஸ் ராணி (சுயே.), 5-வது வார்டு - ரசீதாபீவி (சுயே.), 6-வது வார்டு - அபுபக்கர் அஜ்வாது (சுயே.), 7-வது வார்டு - ரோஸியா பானு (சுயே.), 8-வது வார்டு - மெய்தீன் (சுயே.), 9-வது வார்டு- பூங்கொடி (சுயே.), 10-வது வார்டு ரெங்கநாதன் (தி.மு.க.), 11-வது வார்டு - செய்யது ஆசியா பஹ்மிதா (சுயே.), 12-வது வார்டு - முத்து ஜெய்னம்பு (சுயே.), 13-வது வார்டு முஹம்மது செய்யது பாத்திமா - (சுயே.), 14-வது வார்டு - அன்வர் (சுயே.), 15-வது வார்டு - முத்து முஹம்மது (சுயே.), 16-வது வார்டு - அபுபக்கர் சித்திக் (சுயே.), 17-வது வார்டு - ராமஜெயம் (தி.மு.க.), 18-வது வார்டு - சுல்தான் லெப்பை (சுயே.)

Next Story