விஷம் குடித்து தம்பதி தற்கொலை
கூடலூரில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
கூடலூர்:
கூடலூரில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
தம்பதி தற்கொலை
கூடலூர் நோட்டக்காரன் புளியமர தெருவை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் குபேந்திரன், தனது மனைவியுடன் கூடலூரில் தனியாக வசித்து வந்தார்.
குபேந்திரன் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு அவதியடைந்து வந்தார். மேலும் வறுமையும் வாட்டியது. இதனால் குபேந்திரனும், அவரது மனைவியும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கணவன்-மனைவி 2 பேரும் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
விசாரணை
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கூடலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விஷம் குடித்த தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், குபேந்திரனும், அவரது மனைவியும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கூடலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story