25-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
திண்டுக்கல் புறநகர் பகுதியில் வருகிற 25-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் துணை மின்நிலையத்தில் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலைஅடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், என்.ஜி.ஓ.காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, அடியனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி மற்றும் நாகல்நகர், பாரதிபுரம், ரெயில் நிலையம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை அகிய பகுதிகளில் காலை 9 மணி மதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனை மின்வாரியத்தின் திண்டுக்கல் தெற்கு உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story