கெலமங்கலம் பேரூராட்சியில் தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார்?-சுயேச்சை கவுன்சிலர்கள் முடிவு செய்கிறார்கள்


கெலமங்கலம் பேரூராட்சியில் தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார்?-சுயேச்சை கவுன்சிலர்கள் முடிவு செய்கிறார்கள்
x
தினத்தந்தி 22 Feb 2022 11:32 PM IST (Updated: 22 Feb 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் பேரூராட்சியில் அ.தி.மு.க. 5 இடங்களிலும், சுயேச்சை கவுன்சிலர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராயக்கோட்டை:
கெலமங்கலம் பேரூராட்சியில் அ.தி.மு.க. 5 இடங்களிலும், சுயேச்சை கவுன்சிலர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கெலமங்கலம் பேரூராட்சி 
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பதிவான ஓட்டுகள் நேற்று தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன.
ஓட்டு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. 5 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும், தி.மு.க. 2 இடத்திலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ம.க. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 
கெலமங்கலம் பேரூராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தலைவர் பதவியை தேர்வு செய்ய 8 பேரின்ஆதரவு தேவைப்படுகிறது.
தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 6 சுயேச்சைகளில் 3 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் அங்கு அ.தி.மு.க. தலைவர் பதவியை கைப்பற்றும்.
அதே போல தி.மு.க. கவுன்சிலராக 2 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், 6 சுயேச்சைகளும் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் அங்கு தி.மு.க. தலைவர் பதவியை கைப்பற்றும். இதனால் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார் என்பதை சுயேச்சை கவுன்சிலர்களே முடிவு செய்கிறார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி) 
ஷாயினா (தி.மு.க.) - 367
மஞ்சு என்ற மஞ்சுளா (அ.தி.மு.க.) - 151
தனலட்சுமி (இந்தியகம்யூனிஸ்டு) - 12
2-வது வார்டு(சுயேச்சை வெற்றி) 
கிரிபாபு (சுயே) - 293
சையத் அசேன் (அ.தி.மு.க.) - 213
மதுகுமார் (இந்திய கம்யூனிஸ்டு) - 180
ஆஷாபீ (தி.மு.க.) - 125
3-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி) 
மும்தாஜ் (அ.தி.மு.க.) - 200
மகேஸ்வரி (சுயேச்சை) - 186
சுகுணா (தி.மு.க.) - 86
4-வது வார்டு(சுயேச்சை வெற்றி) 
ஆகிலா (சுயே) -495
நகினா பானு (தி.மு.க.) - 262
5-வது வார்டு(சுயேச்சை வெற்றி) 
விஜயஸ்ரீ (சுயே) - 286
பரத்குமார் (இந்திய கம்யூனிஸ்டு) - 165
மஞ்சுநாத் (அ.தி.மு.க.) - 72
6-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி) 
ஜெயா (அ.தி.மு.க.) - 455
சுமலதா (தி.மு.க.) - 162
மஞ்சுளா (பா.ஜனதா) - 90
7-வது வார்டு(சுயேச்சை வெற்றி) 
நாகராஜ் (சுயே) - 229
நரேஷ் (தி.மு.க.) - 193
ஹரீஷ் (சுயே) - 117
8-வது வார்டு(சுயேச்சை வெற்றி) 
வச்சலா (சுயே) - 219
ரூபா (பா.ஜனதா) - 203
சர்வமங்களா (சுயே) - 196
9-வது வார்டு(இந்திய கம்யூனிஸ்டு வெற்றி) 
வி.எல்லம்மா (இந்திய கம்யூனிஸ்டு) - 307
வே.எல்லம்மா (தி.மு.க.) - 280
10-வது வார்டு(சுயேச்சை வெற்றி) 
மாலா (சுயே) - 274
பூர்ணிமா (அ.தி.மு.க.) - 150
11-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி) 
சண்முகம் (அ.தி.மு.க.) - 370
கங்கேசன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) - 168
முருகேஷ் (தே.மு.தி.க.) - 149
12-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி) 
சீனிவாசன் (அ.தி.மு.க.) - 133
மித்துன் சக்கரவர்த்தி (தி.மு.க.) - 111
13-வது வார்டு (பா.ம.க. வெற்றி) 
வெங்கடாசலபதி (பா.ம.க.) - 189
முனிராஜ் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) - 149
சந்தன் (அ.தி.மு.க.) -100
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி) 
உமா (தி.மு.க.) - 201
நசீமா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) - 187
விஜயா (அ.தி.மு.க.) - 134
15-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி) 
தேவராஜ் (அ.தி.மு.க.) - 304
சிவப்பிரகாஷ் (சுயே) - 91.

Next Story