தினத்தந்தி புகார் பெட்டி
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
மரக்கிளை அகற்றப்படுமா?
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மன்னார்குடி மேலப்பாலம் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள புளியமரத்தின் கிளை கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் சாய்ந்து அந்தரத்தில் தொங்குகிறது. இந்த மரக்கிளை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள், மன்னார்குடி.
Related Tags :
Next Story