வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தை  கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 23 Feb 2022 12:15 AM IST (Updated: 23 Feb 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சி, 7 பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் திருவாரூர் நகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது. இதனை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் பதிவு செய்து ஒவ்வொரு வார்டாக வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிவிக்க வேண்டும் என்றார். மேலும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட வார்டுகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் உடனிருந்தார்.

Next Story