ஒட்டுமொத்த வெற்றியை குவித்த தி.மு.க.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாநகராட்சியில் தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அதேபோல் பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகளிலும் தி.மு.க. வெற்றிவாகை சூடியது. அதோடு நிற்காமல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றிபெற்று வசப்படுத்தி இருக்கிறது.
இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றி ஒட்டுமொத்தமாக தி.மு.க. வெற்றிகளை குவித்து இருக்கிறது. இதன்மூலம் ஒரு வரலாற்று சாதனையை தி.மு.க. நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story