லாரியில் ஏற்றி சென்ற வைக்கோல் தீப்பிடித்தது
கூத்தாநலலூர் அருகே லாரியில் ஏற்றி சென்ற வைக்கோல் தீப்பிடித்தது.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரியில் உள்ள வயலில் நேற்று மதியம் 150 வைக்கோல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வலங்கைமான் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கூத்தாநல்லூர் அருகே உள்ள தண்ணீர்குன்னம் என்ற இடத்தில் சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது, திடீரென வைக்கோல் பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கம்பியில் உரசி தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story