ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்


ரூ.3 லட்சம்  மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Feb 2022 12:41 AM IST (Updated: 23 Feb 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காட்டில் ஈஸ்வரி என்பவரது வீட்டில் மதுபாட்டில் பதுக்கிவைத்து இருப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஈஸ்வரி வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2,800 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர்.

Next Story