54 ஆண்டுகால தாகத்தை தணித்தது தி.மு.க.


54 ஆண்டுகால தாகத்தை தணித்தது தி.மு.க.
x
தினத்தந்தி 23 Feb 2022 12:45 AM IST (Updated: 23 Feb 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியை முதல் முறையாக வென்று 54 ஆண்டுகால தாகத்தை தி.மு.க. தணித்துக்கொண்டது.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 4168 பேரும், பெண் வாக்காளர்கள் 4279 பேரும் என மொத்தம் 8447 வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க.,  வி.சி.க., அ.ம.மு.க. வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 55 பேர் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில்  6 ஆயிரத்து 916 பேர் வாக்களித்தனர். 
இதற்கான வாக்கு எண்ணிக்கை திருவெண்ணெய்நல்லூர் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மின்னணு வாக்குப் பெட்டிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதன்படி 9 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களும், 6 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றனர். 

தி.மு.க. கைப்பற்றியது 

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியாக கடந்த 1968-ம் ஆண்டு தரம் உயர்ந்தது. அதன்பிறகு 12 முறை தேர்தல் நடந்துள்ளது. ஒரு முறை கூட தி.மு.க. பேரூராட்சியை கைப்பற்றியதில்லை. 13-வது முறையாக(கடந்த 19-ந் தேதி) நடந்த தேர்தலில் தி.மு.க. வென்று திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியை கைப்பற்றி 54 ஆண்டுகால தாகத்தை தி.மு.க. தணித்துக்கொண்டது. 

Next Story