தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர்.
பொறையாறு:
தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர்.
15 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டில் நீலமேகம் (தி.மு.க.), 4-வது வார்டில் ரவி (அ.தி.மு.க.). 5-வது வார்டில் ஆனந்தி (அ.தி.மு.க.) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதி உள்ள 15 வார்டுகளுக்கு கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் தி.மு.க. 13 வாக்குகளும், அ.தி.மு.க. 2 வாக்குகளும், 1 வாக்கு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. தபால் வாக்கு எண்ணும் பணியை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில்15 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். தரங்கம்பாடி பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. அதில் தி.மு.க..13 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
15 வார்டுகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
உமா (தி.மு.க.) - 508
சுமதி (சுயே) - 212
மாலதி (அ.தி.மு.க.) - 31
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
பிரம்மநாதன் (தி.மு.க.) -426
தினேஷ் (அ.தி.மு.க.) - 351
பாண்டியன் (நாம் தமிழர் கட்சி) -7
3-வது வார்டு தி.மு.க.வும், 4-வது மற்றும் 5 -வது வார்டுகளில் அ.தி. மு.க.வும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
செந்தாமரைச்செல்வி (தி.மு.க.) - 495
ஜான்சிராணி (அ.தி.மு.க.) - 343
ஜோதி (சுயே) 27
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஆதிலெட்சுமி (தி.மு.க) - 471
அனிட்டா (அ.தி.மு.க.) -145
புவனேஸ்வரி (பா. ம. க) -74
உமாபதி (தே. மு. தி. க.) -20
ஜெயந்தி செல்வக்குமாரி (சுயே) -20
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
தையல்நாயகி (தி.மு.க.) - 366
சுதா (அ.தி.மு.க.) -185
சரஸ்வதி, (நாம் தமிழர் கட்சி) -13
பவுனம்மாள் (சுயே) -4
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஜோன்ஸ்பிடரிக்செல்லப்பா (தி.மு.க.) - 411
பார்த்திபன் (அ.தி.மு.க.) -166
ராமன் (சுயே) -33
கண்ணன் (பா. ஜ.க.) -20
மணிக்கண்டன் (நாம் தமிழர் கட்சி) -4
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கவிதா (தி.மு.க.) -405
கோகிலா (அ.தி.மு.க.) - 302
உமா (நாம் தமிழர் கட்சி) -17
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மனோகரி (தி.மு.க.) -522
சுசீலா (அ.தி.மு.க.) - 73
கீதா, (பா.ம.க.) -21
அனுபிரியா (சுயே) -106
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
பொன்ராஜேந்திரன் (தி.மு.க.) - 554
ரெங்கநாதன் (அ.தி.மு.க.) -195
அருணகுமார் (சுயே) -38
கதிரேசன் (நாம் தமிழர் கட்சி) -12
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சரஸ்வதி (தி.மு.க.) -244
கலைச்செல்வி (அ.தி.மு.க) -236
ஹேமலதா (நாம் தமிழர் கட்சி) -18
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சுகுண சங்கரி (தி.மு.க.) -449
விஜயகுமார் (அ.தி.மு.க.) -82
நாராயணசாமி (பா.ஜ.க.) -15
கவிதா (நாம் தமிழர் கட்சி) - 9
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
குமரவேல் (தி.மு.க.) -551
அருணாச்சலம் (அ.தி.மு.க.) -349
ரமேஷ் (பா.ஜ.க.) -12
பாலகிருஷ்ணன் (அ.ம.மு.க.) -10
சபரி சண்முகம் (நாம் தமிழர் கட்சி) -6
பிரகாஷ் (சுயே) -54
அய்யப்பன் (சுயே) -3
16-வது வார்டு (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி)
அனார்கலி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) - 647
ஜெய்னம்பு நாச்சியார் (எஸ்.டி.பி.ஐ.)
-113
மைமூன்பீவி (அ.தி.மு.க.) -80
டெய்சி (சுயே) -24
17-வது வார்டு (விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி)
சுந்தரமூர்த்தி (விடுதலை சிறுத்தைகள்)- 452
சதீஷ்குமார் (அ.தி.மு.க.) -172
ஜான்சன் அற்புதராஜ் (தே. மு. தி. க.) -96
வினோத் டேவிட் குமார் (நாம் தமிழர்
கட்சி -37
ரமேஷ் (சுயே) -20
மாதவன் (சுயே) -42
18-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
அலமேலு (தி.மு.க.) -517
செல்வி (அ.தி.மு.க) -104
ராஜஸ்ரீ (சுயே) -7
வெற்றி பெற்றவர்களுக்கு தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலகண்ணன் வெற்றி சான்றிதழை வழங்கினார். பின்னர் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதாமுருகனிடம் வாழ்த்து பெற்றனர். அதை தொடர்ந்து செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
Related Tags :
Next Story