ஹிஜாப் சர்ச்சை எழுந்த வார்டில் 10 ஓட்டுகள் பெற்ற பா.ஜனதா


ஹிஜாப் சர்ச்சை எழுந்த வார்டில்  10 ஓட்டுகள் பெற்ற பா.ஜனதா
x
தினத்தந்தி 23 Feb 2022 2:10 AM IST (Updated: 23 Feb 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் மேலூரில் ஹிஜாப் சர்ச்சை எழுந்த வார்டில் பா.ஜனதா வேட்பாளருக்கு 10 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இந்த வார்டில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூரில் ஹிஜாப் சர்ச்சை எழுந்த வார்டில் பா.ஜனதா வேட்பாளருக்கு 10 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இந்த வார்டில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ஹிஜாப் சர்ச்சை

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் தி.மு.க. நகர் செயலாளர் முகமதுயாசின் 8-வது வார்டில் போட்டியிட்டார். இதே வார்டில் பா.ஜ.க. சார்பில் அம்சவேணி போட்டியிட்டார். இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். 
8-வது வார்டுக்கான தேர்தல் அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் நடந்தது. முஸ்லிம் பெண்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அந்த வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் அம்சவேணியின் மகன் கிரிநந்தன் அக்கட்சி முகவராக இருந்தார். 
ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களை  அடையாளம் காண ஹிஜாப்பை அகற்றுமாறு கூறி பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, கிரிநந்தனை வாக்குச்சாவடியில் இருந்து போலீசார் அப்புறபடுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பா.ஜனதாவுக்கு 10 ஓட்டுகள் 

ேமற்கண்ட வார்டில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர் முகமதுயாசின் 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
ஆனால் பா.ஜ.க. வேட்பாளர் அம்சவேணி 10 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. ேவட்பாளர் முத்துகிருஷ்ணகுமார் 125 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முஜிபிர்ரகுமான் 14, அ.ம.மு.க. வேட்பாளர் அப்துல்காதர் 10, தே.மு.தி.க. வேட்பாளர் சரவணன் 6 வாக்குகள் பெற்றனர்.

Next Story