பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்


பிறந்த குழந்தையை சாக்கடையில்   வீசி சென்ற பெண்
x
தினத்தந்தி 23 Feb 2022 2:22 AM IST (Updated: 23 Feb 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயில் நிலையத்தில் செல்லும் சாக்கடையில், பிறந்த குழந்தையை பெண் ஒருவர் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஈரோடு ரெயில் நிலையத்தில் செல்லும் சாக்கடையில், பிறந்த குழந்தையை பெண் ஒருவர் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சாக்கடையில் கிடந்த குழந்தை
ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. அந்த பகுதியில் செல்லும் சாக்கடையில் நேற்று மதியம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த குழந்தையை மீட்டபோது, அது உயிருடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் குழந்தை பிறந்து 2 மணிநேரமே இருக்கலாம் என்றும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா
ஈரோடு ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு பிறந்த குழந்தையை பெண் ஒருவர் தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் வீசி சென்றது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஈரோடு ரெயில்வே போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை பார்வையிட்டு, பிறந்த குழந்தையை வீசி சென்ற பெண் யார்? என்று வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிறந்த குழந்தை சாக்கடையில் கிடந்த சம்பவம் ஈரோடு ரெயில் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story