ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெற்றி

திருச்சி, பிப்.23-
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 7-வது வார்டில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நித்யா 244 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கண்ணன் 243 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நித்யா வெற்றி பெற்றார். இதே வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் செல்லப்பா 141 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த வார்டில் மொத்த வாக்குகள் 981 உள்ளது. இதில் 628 வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story