டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்


டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 23 Feb 2022 2:40 AM IST (Updated: 23 Feb 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

கபிஸ்தலம் :-

கபிஸ்தலம் ஊராட்சி காமராஜர் காலனி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அவர் தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், நர்சு சங்கவை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு காமராஜர் காலனி பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கினர். மேலும் காமராஜர் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணி நடந்தது. முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

Next Story