சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற என்ஜினீயரிங் மாணவி

திருச்சி, பிப்.23-
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சுயேச்சையாக போட்டியிட்ட என்ஜினீயரிங் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி சினேகா (வயது 22) 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., நாம்தமிழர் கட்சி மற்றும் 2 சுயேச்சை உள்ளிட்ட 7 வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்து உள்ளார். இவர்களில் அ.ம.மு.க. வேட்பாளர் மட்டும் 191 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை தக்க வைத்தார். 5-வது வார்டில் மொத்தம் 1,579 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,057 வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story