நெல்லை மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் தி.மு.க. அமோக வெற்றி திசையன்விளை அ.தி.மு.க. வசமானது
நெல்லை மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. திசையன்விளை அ.தி.மு.க. வசமானது.
17 பேரூராட்சிகள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் ஏர்வாடி, கல்லிடைக்குறிச்சி, கோபாலசமுத்திரம், சங்கர் நகர், சேரன்மாதேவி, திருக்குறுங்குடி, நாரணம்மாள்புரம், நாங்குநேரி, பணகுடி, பத்தமடை, மணிமுத்தாறு, முக்கூடல், மூலைக்கரைப்பட்டி, மேலச்செவல், வடக்கு வள்ளியூர், வீரவநல்லூர் ஆகிய 16 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.
திசையன்விளை பேரூராட்சியை மட்டும் அ.தி.மு.க. தன் வசமாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஏர்வாடி-கல்லிடைக்குறிச்சி
ஏர்வாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஒரு வார்டுகளில் கூட வெற்றி பெறவில்லை. 8 வார்டுகளை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 11 வார்டுகளில் தி.மு.க.வும், 9 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி வாகை சூடியுள்ளது.
கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 12 வார்டுகளை தி.மு.க.வும், 1 வார்டில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்று உள்ளனர்.
சேரன்மாதேவி
சங்கர்நகர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் 11 வார்டுகளை தி.மு.க.வும், 1 வார்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் அ.தி.மு.க. ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
சேரன்மாதேவி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
திருக்குறுங்குடி பேரூராட்சி 15 வார்டுகளில் 5 வார்டை தி.மு.க.வும், 4 வார்டுகளை அ.தி.மு.க.வும், 6 வார்டுகளை சுயேச்சைகளும் வென்று உள்ளனர்.
நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் 15 வார்டில் தி.மு.க. 13 வார்டிலும், அ.தி.மு.க., சுயேச்சைகள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். நாங்குநேரியில் 15 வார்டுகளில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க.வும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வென்று உள்ளனர்.
பணகுடி-மணிமுத்தாறு
பணகுடி பேரூராட்சிகளில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க., காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும், பா.ஜனதா, சுயேச்சைகள் தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பத்தமடை 15 வார்டுகளில் 10 வார்டில் தி.மு.க.வும், ஒரு வார்டில் அ.தி.மு.க.வும், 4 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
மணிமுத்தாறு 15 வார்டுகளில் 10 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வென்றுள்ளனர்.
முக்கூடல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 11 வார்டுகளிலும், பா.ஜனதா, சுயேச்சைகள் தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க. 5 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வாகைசூடி உள்ளனர்.
மேலச்செவல்-வடக்கு வள்ளியூர்
மேலச்செவலில் உள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இங்கு 4 வார்டுகளை அ.தி.மு.க.வும், 2 வார்டுகளை சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
வடக்கு வள்ளியூரில் 18 வார்டுகளில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். வீரவநல்லூரில் 18 வார்டுகளில் 9 வார்டுகளை தி.மு.க.வும், ஒரு வார்டில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், 6 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
திசையன்விளை அ.தி.மு.க. வசம்
திசையன்விளை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இங்கு ஆளுங்கட்சியான தி.மு.க. 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்காட்சியான அ.தி.மு.க. 9 வார்டுகளில் வென்று பேரூராட்சியை தன்வசப்படுத்தி உள்ளது. மேலும் காங்கிரஸ் 2 வார்டுகளிலும், பா.ஜனதா, ேத.மு.தி.க. தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
Related Tags :
Next Story