தஞ்சை மாவட்டத்தில் 20-ல் 15 பேரூராட்சிகளை அள்ளிய தி.மு.க.


தஞ்சை மாவட்டத்தில் 20-ல் 15 பேரூராட்சிகளை அள்ளிய தி.மு.க.
x
தினத்தந்தி 23 Feb 2022 2:49 AM IST (Updated: 23 Feb 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 20 பேரூராட்சிகளில் 15 பேரூராட்சிகளை தி.மு.க. அள்ளியது. ஒரு பேரூராட்சியை அ.ம.மு.க. கைப்பற்றிய நிலையில் 4 பேரூராட்சிகளில் இழுபறி நீடிக்கிறது. 3 பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 20 பேரூராட்சிகளில் 15 பேரூராட்சிகளை தி.மு.க. அள்ளியது. ஒரு பேரூராட்சியை அ.ம.மு.க. கைப்பற்றிய நிலையில் 4 பேரூராட்சிகளில் இழுபறி நீடிக்கிறது. 3 பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

20 பேரூராட்சிகள்

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 20 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தி.மு.க. 15 பேரூராட்சிகளை கைப்பற்றியது. 4 பேரூராட்சிகளில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது. 3 பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஒரத்தநாடு பேரூராட்சியை அ.ம.மு.க. கைப்பற்றி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை ஆகியவை தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மெலட்டூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுக்கூர்-திருவையாறு

மதுக்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சை 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். திருவையாறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க.-11, அ.தி.மு.க.-2, சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வல்லம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க.-14, அ.தி.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். பெருமகளூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் தி.மு.க. 6,, அ.தி.மு.க. 3, சுயேச்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

பாபநாசம்-பேராவூரணி

பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8, அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 
பேராவூரணி பேரூராட்சி 18 வார்டுகளில் தி.மு.க.-10, அ.தி.மு.க.-4 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒன்றும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருநாகேஸ்வரம்-அய்யம்பேட்டை

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். வேப்பத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், பா.ஜ.க. ஒன்று, சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அய்யம்பேட்டை பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு வார்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க., தே.மு.தி.க., சுயேச்சை தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க.வுக்கு இடமில்லை

திருவிடைமருதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 9 வார்டுகளிலும், சுயேச்சை 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சோழபுரம் பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க. 12 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 11 வார்டுகளிலும், அ.ம.மு.க., சுயேச்சை தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளர். 
(மேற்கண்ட 3 பேரூராட்சிகளிலும் அ.தி.மு.க.வினர் யாரும் வெற்றி பெறவில்லை).

4 பேரூராட்சிகளில் இழுபறி

ஆடுதுறை பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க. 4 வார்டுகளிலும், பா.ம.க. 4 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 
திருப்பனந்தாள் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 7 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு வார்டிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல் சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 6 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒன்றும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 
திருபுவனம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 6 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேற்கண்ட 4 பேரூராட்சிகளிலும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.ம.மு.க. கைப்பற்றியது

ஒரத்தநாடு பேரூராட்சி 15 வார்டுகளில் அ.ம.மு.க. 9 வார்டுகளிலும், தி.மு.க. 3 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Next Story