தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பட்டுக்கோட்டை தவிர அனைத்து நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது


தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பட்டுக்கோட்டை தவிர அனைத்து நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 2:57 AM IST (Updated: 23 Feb 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை தவிர அனைத்து நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது

தஞ்சாவூர்:-

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பட்டுக்கோட்டை நகராட்சி தவிர மற்ற அனைத்து நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

மயிலாடுதுறை நகராட்சி

மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் 19-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் அன்னதாட்சி மரணமடைந்தார். இதனால் 35 வார்டுகளுக்கு கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 
இதில் தி.மு.க. 24 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும் காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் தேர்தல் நடந்த 35 வார்டுகளில் 24 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்று உள்ளதால் மயிலாடுதுறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 35
தி.மு.க. - 24
அ.தி.மு.க. - 7
பா.ம.க. - 2
காங்கிரஸ் - 1
ம.தி.மு.க. - 1

சீர்காழி நகராட்சி

சீர்காழி நகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. 11 வார்டுகளையும், அ.தி.மு.க. 3 வார்டுகளையும், பா.ம.க. 2 வார்டுகளையும், தே.மு.தி.க. ஒரு வார்டையும், ம.தி.மு.க. ஒரு வார்டையும், சுயேச்சைகள் 6 வார்டுகளையும்  கைப்பற்றி உள்ளனர்.
 மொத்தம் உள்ள 24 வார்டுகளில் 11 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளதால் சீர்காழி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 24
தி.மு.க. - 11
அ.தி.மு.க. - 3
பா.ம.க. - 2
தே.மு.தி.க. - 1 
ம.தி.மு.க. - 1
சுயேச்சைகள் - 6

நாகை நகராட்சி

நாகப்பட்டினம் நகராட்சியில் ெமாத்தம் உள்ள 36 வார்டுகளில் 16-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனவே 35 வார்டுகளில் தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 28 வார்டுகளையும், அ.தி.மு.க. 5 வார்டுகளையும், சுயேச்சைகள் 2 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளனர். 
நாகப்பட்டினம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் தி.மு.க. 28 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளதால் நாகப்பட்டினம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 35
தி.மு.க. - 28
அ.தி.மு.க. - 5
சுயேச்சைகள் - 2

வேதாரண்யம் நகராட்சி

வேதாரண்யம் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 17 வார்டுகளை தி.மு.க.வும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், மனித நேய ஜனநாயக கட்சி ஒரு வார்டிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்று உள்ளது. 
வேதாரண்யம் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 17 வார்டுகளை தி.மு.க. பெற்று உள்ளதால் இந்த நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 21
தி.மு.க. - 17
அ.தி.மு.க. - 1
காங்கிரஸ் - 1
மனிதநேய ஜனநாயக கட்சி - 1
சுயேச்சை - 1
 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

திருவாரூர் நகராட்சி

திருவாரூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க. 23 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்று உள்ளனர். 
மொத்தம் உள்ள 30 வார்டுகளில் 23 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளதால் இந்த நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 30
தி.மு.க. - 23
அ.தி.மு.க. - 3
மனிதநேய மக்கள் கட்சி - 2
காங்கிரஸ் - 1
சுயேச்சை - 1

திருத்துறைப்பூண்டி நகராட்சி

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. 14 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளனர். 
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. 14 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளதால் திருத்துறைப்பூண்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
வார்டு இறுதி நிலவரம் 
மொத்த வார்டுகள் - 24
தி.மு.க. - 14
காங்கிரஸ் - 3
அ.தி.மு.க. - 2
மா.கம்யூனிஸ்டு - 2
இ.கம்யூனிஸ்டு - 1
சுயேச்சைகள் - 2

மன்னார்குடி நகராட்சி

மன்னார்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 26 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், அ.ம.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்று உள்ளனர். 
மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 26 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளதால் மன்னார்குடி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 33
தி.மு.க. - 26
அ.தி.மு.க. - 4
அ.ம.மு.க. - 2
சுயேச்சை - 1

கூத்தாநல்லூர் நகராட்சி

கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. 17 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்று உள்ளனர்.   
கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள மொத்தம் 24 வார்டுகளில் தி.மு.க. 17 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளதால் கூத்தாநல்லூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 24
தி.மு.க. - 17
அ.தி.மு.க. - 3
இ.கம்யூனிஸ்டு - 2
காங்கிரஸ் - 1
சுயேச்சை - 1

 அதிராம்பட்டினம் நகராட்சி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு முதல் தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதிராம்பட்டினம் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 19 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும், பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி உள்ளன. அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 19 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளதால் அதிராம்பட்டினம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 27
தி.மு.க. - 19
அ.தி.மு.க. - 2
பா.ஜனதா - 1
எஸ்.டி.பி.ஐ. - 1
ஐ.யூ.எம்.எல். - 1
இந்திய கம்யூனிஸ்டு - 1
சுயேச்சைகள் - 2

பட்டுக்கோட்டை நகராட்சி

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், ம.தி.மு.க. ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 
இந்த நகராட்சியை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சம பலத்தில் உள்ளன. சுயேச்சைகள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்கள்தான் பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்ற முடியும். எனவே பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றப்போவது யார் என்பதற்கு விரைவில் விடை தெரிந்து விடும். 
வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 33
அ.தி.மு.க. - 13  
தி.மு.க. - 12
ம.தி.மு.க. 1
சுயேச்சைகள் -7.

Next Story