நெல்லையில் இருந்து கேரளாவுக்கு லாரி - வேனில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


நெல்லையில் இருந்து கேரளாவுக்கு  லாரி - வேனில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 23 Feb 2022 3:04 AM IST (Updated: 23 Feb 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

லாரி - வேனில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்

நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் நெல்லை - நாகர்கோவில் சாலையில் பொன்னாக்குடி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த லாரி மற்றும் வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
அப்போது லாரி மற்றும் வேனில் இருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர். அதில் 3 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 24), நெல்லை வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (24), நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியை சேர்ந்த சுடலை குமார் (21) ஆகியோர் என்பதும், லாரி மற்றும் வேனில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தினேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 14 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி, வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story