நகராட்சி-பேரூராட்சிகளை முழுமையாக கைப்பற்றிய தி.மு.க.
நகராட்சி-பேரூராட்சிகளை முழுமையாக தி.மு.க. கைப்பற்றியது.
பெரம்பலூர்:
தி.மு.க. அமோக வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், லெப்பைக் குடிகாடு, பூலாம்பாடி, அரும்பாவூர் ஆகிய பேரூராட்சிகளையும் தி.மு.க. முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில், தி.மு.க. கூட்டணி 16 வார்டுகளில் வெற்றி பெற்றது.
குரும்பலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில், தி.மு.க. 11 வார்டுகளிலும், அரும்பாவூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில், தி.மு.க. 8 வார்டுகளிலும், பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில், ஏற்கனவே 2 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. தற்போது 10 வார்டுகளிலும், லெப்பைக்குடிகாடுபேரூராட்சியில் 15 வார்டுகளில், 14 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 14 வார்டுகளிலும் வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது.
35 ஆண்டுகளுக்கு பிறகு...
கடந்த முறை அ.தி.மு.க. வசம் இருந்த பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி, லெப்பைக்குடிகாடு பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. பூலாம்பாடி பேரூராட்சியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. அரும்பாவூர் பேரூராட்சியை சுயேச்சையிடம் இருந்து தி.மு.க. கைப்பற்றியது. மேலும் அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க. சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story