நெல்லை:மனைவியை தாக்கிய கணவன் கைது
மனைவியை தாக்கிய கணவனை கைது செய்தனர்
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 43). இவருடைய மனைவி முத்தரசி (37). இவர்கள் 2 பேரும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தரசி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் காரில் அமர்ந்து போலீஸ்காரர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாரிமுத்து, முத்தரசியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கி உள்ளார். இதுகுறித்து முத்தரசி ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு மாரிமுத்துவை கைது செய்தனர்.
இதற்கிடையே மாரிமுத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story