மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
ஆதனக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சியில் இருந்து மணவாத்திப்பட்டிக்கு செல்லும் சாலையில் காட்டுப்பட்டி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்தநிலையில் பெருங்களூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ் (வயது 28) என்பவர் புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மேட்டுப்பட்டி செல்வராசு மகன் ராஜா (31) கொத்தனாராக வேலை பார்த்து வருகின்றார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது பெங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பள்ளி முடிந்த பின் மாலையில் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மது அருந்தி கொண்டிருந்த விக்னேசும், ராஜாவும் சேர்ந்து அந்த மாணவிகளிடம் பாலியல் தொடர்பான சீண்டலில் ஈடுபட்டனர். மாணவிகள் சத்தம் போடவே அவர்களை விட்டுவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாக போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவிகளுடன் சேர்ந்து பெருங்களூர்- மேட்டுப்பட்டி இடையேயான சாலையில் டாஸ்மாக் கடை முன்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நீண்ட நேரமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் விக்னேஷ், ராஜாவை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இரு இளைஞர்களையும் ஆதனக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் ரவி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story