தென்காசி மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது
தென்காசி மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் அ.தி.மு.க.வும், வாசுதேவநல்லூர், ராயகிரி, ஆலங்குளத்தில் சுயேச்சைகளும் அதிக இடங்களில் வெற்றி பெற்றன.
நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் ஆய்க்குடி, இலஞ்சி, கீழப்பாவூர், மேலகரம், பண்பொழி, புதூர் (எஸ்), சாம்பவர் வடகரை, சிவகிரி, திருவேங்கடம், வடகரை கீழ்பிடாகை ஆகிய 10 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.
அதன் விவரம் வருமாறு:-
ஆய்க்குடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 9 வார்டுகளை கைப்பற்றியது. 5 வார்டுகளில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.
மேலகரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகள் தி.மு.க. வசமானது. அ.தி.மு.க., சுயேச்சைகள் தலா 3 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
சிவகிரி
சிவகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 7 வார்டுகளையும், சுயேச்சைகள் 6 வார்டுகளையும் கைப்பற்றின. இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ் தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றது. ஒரு வார்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 14 வார்டுகளை கைப்பற்றியது. அ.தி.மு.க., பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ., சுயேச்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
பண்பொழி
சாம்பவர் வடகரை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 6 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
பண்பொழி பேரூராட்சி 15 வார்டுகளில் 7 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வும், சுயேச்சையும் தலா 4 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
திருவேங்கடம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளையும், 6 வார்டுகளை ம.தி.மு.க.வும் கைப்பற்றியது. அ.தி.மு.க. ஒரு வார்டில் வெற்றி பெற்றது.
புதூர் (எஸ்) பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க., சுயேச்சை தலா 2 வார்டுகளிலும், ஒரு வார்டில் பா.ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
இலஞ்சி பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளை வசமாக்கியது. 5 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் சுயேச்சையும் வெற்றி பெற்றது.
கீழப்பாவூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளை கைப்பற்றியது. அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ், சுயேச்சை தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.
குற்றாலம்
குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா 4 இடங்களை கைப்பற்றின.
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க.வும், சுயேச்சையும் தலா 7 வார்டுகளை கைப்பற்றின. ஒரு வார்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
அச்சன்புதூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 5 வார்டுகளையும், அ.தி.மு.க. 5 வார்டுகளையும் கைப்பற்றியது. 2 வார்டுகளில் அ.ம.மு.க.வும், 3 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளது.
சுயேச்சை வசமானது
ராயகிரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 6 வார்டுகளிலும், 9 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுயேச்சைகள் 5 வார்டுகளை கைப்பற்றியுள்ளன. 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 3 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் தே.மு.தி.க.வும், ஒரு வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் சுயேச்சைகள் 11 வார்டுகளை கைப்பற்றினர். தி.மு.க. 5 வார்டுகளிலும், அ.தி.மு.க., அ.ம.மு.க. தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆழ்வார்குறிச்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது.
ஆழ்வார்குறிச்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதன்மூலம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அ.தி.மு.க. வசமானது. தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
Related Tags :
Next Story