கொல்லங்கோட்டில் தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சமபலம்


கொல்லங்கோட்டில் தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சமபலம்
x
தினத்தந்தி 23 Feb 2022 3:45 AM IST (Updated: 23 Feb 2022 3:45 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு நகராட்சியில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 10 இடங்களில் வெற்றி பெற்றது.

கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு நகராட்சியில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 10 இடங்களில் வெற்றி பெற்றது.
புதிதாக உருவான நகராட்சி
குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு, ஏழுதேசம் போன்ற பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து புதிதாக கொல்லங்கோடு நகராட்சி உருவாக்கப்பட்டது. இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு இதுதான் முதல் தேர்தல் ஆகும். எனவே, பல கட்சிகளும் இந்த நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்று மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டன.
25,603 ஆண் வாக்காளர்களும், 26,059 பெண் வாக்காளர்களும், 4 திருநங்கைகளும் என மொத்தம் 51 ஆயிரத்து 666 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 33 வார்டுகளில் 165 போ் போட்டியிட்டனர். 
தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 14,595 பேரும், பெண் வாக்காளர்கள் 17,050 பேரும் என மொத்தம் 31,645 வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த நகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 61.34 ஆகும்.
தி.மு.க.-மார்க்சிஸ்ட் சமபலம்
இங்கு நேற்று நடைெபற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. 10 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 10 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பா.ஜனதா 5 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும், தே.மு.தி.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
கொல்லங்கோடு நகராட்சியிலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் சமபலத்துடன் வார்டுகளை கைப்பற்றியதால், கொல்லங்கோடு நகராட்சியில் எந்த கட்சியை சேர்ந்தவர் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்? என்பது 4-ந் தேதி நடைபெறும் மறைமுக தேர்தலின் போது தெரியவரும். 
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 
வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு.-
1-வது வார்டு- கி.பத்ம குமார் (பா.ஜ.க.)- 340 வாக்குகள்.
2-வது வார்டு- நே. ஷீஜாராணி (தி.மு.க.)-308 வாக்குகள்.
3-வது வார்டு-க. லீமா ரோஸ் (காங்கிரஸ்)-322 வாக்குகள்.
4-வது வார்டு-த. ஷீபா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-320 வாக்குகள்.
5- வது வார்டு- செ. பேபி (காங்கிரஸ்)- 548 வாக்குகள்
6-வது வார்டு- த. கவிதா (காங்கிரஸ்)- 377 வாக்குகள்
7- வது வார்டு- ரா. லதா (தி.மு.க.)- 370 வாக்குகள் 
8-வது வார்டு- லா. அனிலா (தி.மு.க.)- 317 வாக்குகள்
9-வது வார்டு- அஜிதா (தே.மு.தி.க.)- 342 வாக்குகள்
10-வது வார்டு- ஜெயசுதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 441 வாக்குகள்
11- வது வார்டு- கா. முகமது புரோஸ்கான் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 303 வாக்குகள்
12- வது வார்டு- சி. ஆல்பர்ட் ஜெப சிங் (அ.தி.மு.க.)- 309 வாக்குகள்
13-வது வார்டு- எம். கமலாசனன் நாயர் (பா.ஜ.க)- 445 வாக்குகள்
14-வது வார்டு- கலாஸ்ரீ (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 264 வாக்குகள்
15-வது வார்டு- ரு.லலிதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 187 வாக்குகள்
16-வது வார்டு- ஜெ. கிறிஸ்டல்பாய் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 380 வாக்குகள்
17-வது வார்டு- ஐ. ரசல்ராஜ் (காங்கிரஸ்)- 234 வாக்குகள்
18-வது வார்டு- நூ.லத்தீப் (தி.மு.க.)- 349 வாக்குகள்
19-வது வார்ட-ு பெஞ்சமின் பிராங்கிளின் (தி.மு.க.)- 593 வாக்குகள்
20-வது வார்டு- தே. சிந்து (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 376 வாக்குகள்
21- வது வார்டு- ப. விஜய மோகனன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 380 வாக்குகள்
22-வது வார்டு- லட்சுமி பிரியா (பா.ஜ.க.)- 452 வாக்குகள்
23- வது வார்டு- சி.ஸ்டீபன் (தி.மு.க.)- 210 வாக்குகள்
24-வது வார்டு- த. ஆனந்த குமார் (பா.ஜ.க.)- 342 வாக்குகள்
25-வது வார்டு- செ.ராணி (தி.மு.க.)- 663 வாக்குகள்
26-வது வார்டு- ஜோ. ஜெயசிங் (தி.மு.க.)- 505 வாக்குகள்
27-வது வார்டு- அ.செல்வராஜ் (தி.மு.க.)- 747 வாக்குகள்
28- வது வார்டு- ஜெ.ஜெரோம் (காங்கிரஸ்)- 386 வாக்குகள்
29-வது வார்டு- பா.பரமேஸ்வரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 314 வாக்குகள்
30-வது வார்டு- பி.டெல்மா (காங்கிரஸ்)- 305 வாக்குகள்
31-வது வார்டு- ப.சுதா (பா.ஜ.க.)- 394 வாக்குகள்
32-வது வார்டு- எஸ். ஷீபா (தி.மு.க.)- 288 வாக்குகள்
33-வது வார்டு- கி.சசிந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 223 வாக்குகள் 

Next Story