‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Feb 2022 6:33 PM IST (Updated: 23 Feb 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைத்தொட்டி அவசியம்

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரில் 2-வது மெயின் ரோட்டில் குப்பைத்தொட்டி இல்லை. இதனால் திறந்த வெளியில் குப்பைகளை மக்கள் கொட்டிச் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, அங்கு குப்பைத்தொட்டி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கே.வரதராஜன், நெல்லை டவுன்.

பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுமா?
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சில தெருக்களில் மட்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. 5, 6-வது தெருக்களில் அரைகுறையாக பதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3, 4-வது தெரு மற்றும் லெப்பை வளவு தெருக்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் கற்கள் பதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மீரான், ஏர்வாடி.

தெருவிளக்கு எரியவில்லை
நெல்லை பேட்டை 20-வது வார்டு எம்.ஜி.பி. வாய்க்கால் தெரு நுழைவு பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. மேலும், மற்றொரு கம்பத்தில் பழுதடைந்த மின்விளக்கு அகற்றப்பட்டது. அதன்பின்னர் இதுவரை பொருத்தப்படவில்லை. எனவே, தெரு விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இ.ஷாஜகான், பேட்டை.

பழுதடைந்த வாறுகால் பாலம்

ராதாபுரம் தாலுகா சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து கட்டநேரி கிராமத்தின் நுழைவு பகுதியில் வாறுகால் பாலம் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே, அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஸ்வரன், கட்டநேரி.

கொசு தொல்லை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மாரியம்மன் கோவில் தெருவில் பல நாட்களாக வாறுகால் தூர்வாரப்படவில்லை. இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கிய வாறுகால் கழிவுநீர், குடிநீரில் கலந்து வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, கொசு மருந்து தெளித்து கொசு தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன், ஆலங்குளம்.

வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?
வாசுதேவநல்லூர் கீழ பஜாரில் 8 வேகத்தடைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்திலும் வர்ணம் எதுவும் பூசப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வேகத்தடைகள் அனைத்திலும் வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இசக்கிமுத்து, வாசுதேவநல்லூர்.
  
குடிநீர் வினியோகம் சீராகுமா?
தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, 2 நாட்களுக்கு முறை சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கு.அருணாசலம், தென்காசி. 

ரோட்டில் பள்ளம்

கடையம் யூனியன் பெரும்பத்து பஞ்சாயத்து வெய்க்காலிப்பட்டி பிள்ளையார் கோவில் கீழ்புறம் செல்லும் மெயின் ரோட்டில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
து.அற்புதஜெகன் பிரகாஷ், கடையம்.

செவிலியர்கள் நியமிக்கப்படுவார்களா?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகள் இருந்தும் போதுமான செவிலியர்கள் இல்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது. எனவே, கூடுதலாக செவிலியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜம்பு, பண்டாரபுரம்.

குடிநீர் தட்டுப்பாடு
தூத்துக்குடி 3-வது வார்டு பழைய ஹவுசிங் போர்டு காலனியில் 6 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
தேவி, தூத்துக்குடி.

Next Story