ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் பணி பாதிப்பு


ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2022 8:52 PM IST (Updated: 23 Feb 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக சர்வர் கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக சர்வர் கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
735 ரேஷன் கடைகள் 
திருவாரூர் மாவட்டத்தில் 735 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதத்திற்கு தேவையான அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 3 லட்சத்து 80 ஆயிரத்து 712 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு, ஆதார் அட்டையும் இணைக்கப்பட்டு போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் மேம்படுத்தி பயோமெட்ரிக் முறையான கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதியவர்களின் கை ரேகைகள் அழிவதால் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் நிலவி வந்தது.
சர்வர் கோளாறு 
குறிப்பாக சர்வர் குறைபாட்டினால் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயோமெட்ரிக் முறையினை கைவிட்டு பழைய நடைமுறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 3 நாட்களாக சர்வர் கோளாறு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுபட்டு வருகின்றனர்.
பொருட்கள் வழங்கும் பணி பாதிப்பு 
இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறுகையில், 
பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் சர்வர் கோளாறு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடியாத நிலை நிலவி வருகிறது.
இந்த மாதம் இறுதி நாட்களில் சர்வர் கோளாறு காரணமாக பொருட்கள் வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 3-வது நாளாக இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதனை பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு புரிய வைக்க முடியாமல் மிகுந்த வேதனையடைந்து வருகிறோம்.
எனவே சர்வர் பிரச்சினை இன்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் பயோமெட்ரிக் முறையை கைவிட்டு பழைய நடைமுறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்றனர். 
---


Next Story