நடுரோட்டில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்
பட்டிவீரன்பட்டி அருகே நடுரோட்டில் அரசு பஸ் பஞ்சராகி நின்றது.
பட்டிவீரன்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆடலூரில் இருந்து பெரும்பாறை வழியாக, வத்தலக்குண்டு நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் 30 பேர் பயணம் செய்தனர். மதியம் 12.30 மணியளவில், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள கணேசபுரம் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென முன்பக்க டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்று விட்டது. பஸ்சில் மாற்று டயர் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை. இதனால் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர். பலமணி நேரம் நடுரோட்டிலேயே காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
அதன்பிறகு அந்த வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்ற தனியார் பஸ்சில் அவர்கள் ஏறி சென்றனர். பஞ்சராகி நின்ற அரசு பஸ், வத்தலக்குண்டு பணிமனைக்கு உட்பட்டதாகும்.
அந்த பணிமனையில் இருந்து இயக்கப்படுகிற பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே மலைக்கிராமங்களுக்காவது நல்ல பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story