தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 4 வார்டுகளிலும் தோல்வி


தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 4 வார்டுகளிலும் தோல்வி
x
தினத்தந்தி 23 Feb 2022 10:33 PM IST (Updated: 23 Feb 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 4 வார்டுகளிலும் தோல்வி கண்டது. பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 4 வார்டுகளிலும் தோல்வி கண்டது. பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 

பட்டுக்கோட்டை நகராட்சி 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் தி.மு.க. 12 இடங்களிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான த.மா.கா. 5, 8, 21, 26 ஆகிய 4 வார்டுகளில் போட்டியிட்டது. அ.தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 33 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டது. இதில் அ.தி.மு.க. 12 இடங்களில் வெற்றி பெற்றது. த.மா.கா.வை சேர்ந்த நாடிமுத்து 21-வது வார்டில் வெற்றி பெற்றார். 
பட்டுக்கோட்டை நகராட்சியில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி 4,20,26,29 ஆகிய 4 வார்டுகளிலும் தனித்துப்போட்டியிட்டது. இதில் அந்த கட்சி 4 வார்டுகளிலும்  தோல்வியை தழுவியது. பா.ஜனதா 15 இடங்களில் போட்டியிட்டது. பா.ஜனதாவுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 

அதிக வாக்குகள்

19-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ரவிக்குமார் 33 வார்டுகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் வாங்கிய வாக்குகள் 1645 ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தினகர் பெற்ற வாக்குகள் 423. வெற்றி பெற்ற 7 சுயேச்சை வேட்பாளர்களில் 25-வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் நகர சபை தலைவர் ஜவகர்பாபு 976 வாக்குகள் பெற்றார். 

Next Story