ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு


ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 23 Feb 2022 10:36 PM IST (Updated: 23 Feb 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் மத்திய அரசை கண்டித்து நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

பாபநாசம்:-

பாபநாசத்தில் மத்திய அரசை கண்டித்து நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். 

ஆர்ப்பாட்டம்

‘ஹிஜாப்’ விவகாரத்தில் மத்திய அரசு இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி பாபநாசம் புதிய பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் அகில இந்திய மாணவர் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் செங்கதிர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதை அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி  மற்றும் போலீசார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்த கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் கண்ணையன் மற்றும் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது வருகிற 4-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என அறிவுறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 

தேர்தல் நடத்தும் அலுவலர்

பேச்சுவார்த்தையின்போது பாபநாசம் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன், கட்சி ஒன்றிய செயலாளர் செல்லதுரை, மாவட்ட செயலாளர்கள் மாசிலாமணி, செந்தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் லெனின், தனசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story