அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 Feb 2022 10:39 PM IST (Updated: 23 Feb 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

அதிராம்பட்டினம்:-

அதிராம்பட்டினம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். 

தொழிலாளி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சால்ட் லைன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது28). தொழிலாளி. இவர் நேற்று பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தனது அக்காவை பார்ப்பதற்கு உறவினர் கவாஸ்கர் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை வந்தார். 
பின்னர் அங்கிருந்து இவர்கள் அதிராம்பட்டினம் திரும்பிக் கொண்டிருந்தனர். அதிராம்பட்டினம் அருகே காளிகோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

சம்பவ இடத்தில் பலி

இந்த விபத்தில் சரவணன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கவாஸ்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை அறிந்த அதிராம்பட்டினம் போலீசார் அங்கு விரைந்து சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story