பெரியகுளம் :
பெரியகுளம் துணை மின்நிலைய கட்டுப்பாட்டின்கீழ் உள்ள தாமரைக்குளம் உயர் அழுத்த மின் பாதையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 25, 28, அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் திறன் மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதனையொட்டி தண்டுபாளையம், ஜே.ஆர்.ஆர். நகர், கம்பம் ரோடு, பாரதி நகர், வடுகப்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கூறிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.