கந்தம்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


கந்தம்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2022 11:24 PM IST (Updated: 23 Feb 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

கந்தம்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருேக உள்ள திடுதல் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38). விவசாயி. இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்களுக்கு பிரவீன் என்ற மகனும், பிரனிசா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் பழனிசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பழனிசாமி விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story