பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் உள்பட 3 பேர் கைது
பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் உள்பட 3 பேர் கைது
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அடுத்த தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவியை அக்கரைப்பட்டியை சேர்ந்த சாமிநாதன் மகன் நந்தகுமார் (வயது 24) ஆசைவார்த்தை கூறி 9 பவுன் நகையுடன் கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இதையறிந்த நந்தகுமார் மற்றும் அவருடைய அண்ணன்கள் ரத்தினவேல் (26), சதீஸ்குமார் (32) ஆகியோர் மாணவியை வீட்டில் விட்டு விட்டு தலைமறைவாகினர். இந்த நிலையில் நேற்று வெண்ணந்தூர் வந்த நந்தகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில், மாணவி கடத்தலுக்கு உதவிய அண்ணன்கள் சதீஸ்குமார், ரத்தினவேல் ஆகியோரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். பின்னர் அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட நந்தகுமார் மீது அரிசி கடத்தல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story