ஆற்காடு நகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 37 பேர் டெபாசிட் இழந்தனர்
ஆற்காடு நகராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 37 பேர் டெபாசிட் இழந்தனர். திமிரி பேரூராட்சி வார்டில் தி.மு.க. டெபாசிட் இழந்தது.
ராணிப்பேட்டை
ஆற்காடு நகராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 37 பேர் டெபாசிட் இழந்தனர். திமிரி பேரூராட்சி வார்டில் தி.மு.க. டெபாசிட் இழந்தது.
37 பேர் டெபாசிட் இழந்தனர்
ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 28 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 96 பேர் போட்டியிட்டனர்.
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 25 பேரில் 16 பேர் வெற்றி பெற்றனர். 9 பேர் தோல்வியடைந்தனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 25 பேரில் 4 பேர் வெற்றி பெற்றனர். 21 பேர் தோல்வியடைந்தனர். அதில் 9 பேர் டெபாசிட் இழந்தனர். பா.ஜ.க. சார்பில் போட்டிட்ட 11 பேரும் தோல்வியடைந்தனர். அவர்களில் 7 பேர் டெபாசிட் இழந்தனர். பா.ம.க. சார்பில் 8 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 3 பேர் வெற்றி பெற்றனர். 5 பேர் தோல்வியடைந்தனர். 3 பேர் டெபாசிட் இழந்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட 4 பேரும் டெபாசிட் இழந்தனர். போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 96 பேரில் சுயேச்சை வேட்பாளவ்கள் உள்பட 37 பேர் டெபாசிட் இழந்தனர்.
தி.மு.க.
திமிரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க. போட்டியிட்டது. இதில் 9-வது வார்டில் தி.மு.க. டெபாசிட் இழுந்தது. 10 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். பா.ஜ.க. ஒரு வார்டிலும், நாம் தமிழர் கட்சி ஒரு வார்டிலும் டெபாசிட் இழந்துள்ளனர்.
கலவை பேருராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 15 வார்டுகளில் போட்டியிட்டு 7, 9, 10 ஆகிய 3 வார்டுகளில் டெபாசிட் இழந்தது. பா.ம.க. 3 வார்டுகளில் போட்டியிட்டு 3, 6-வது வார்டுகளிலும், பா.ஜ.க. 6 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும், நாம் தமிழர் கட்சி 3 வார்டுகளிலும் போட்டியிட்டு டெபாசிட் இழந்தது.
Related Tags :
Next Story