காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Feb 2022 12:06 AM IST (Updated: 24 Feb 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கால்வாய் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியில் இத்திட்டத்திற்கு தற்போது புதிய வழித்தடத்தில் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த பணிகள் மேற்கொண்டால் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் எனவும், ஏற்கனவே அளவிடப்பட்ட வழியில் தான் பணிகள் நடைபெற வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பாலன் நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக அளவிட சென்ற அதிகாரிகளை நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு தடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை நீர்வளம் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story