தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய வாலிபர்


தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய வாலிபர்
x
தினத்தந்தி 24 Feb 2022 12:24 AM IST (Updated: 24 Feb 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது

கீழப்பழுவூர்
திருவாரூர் மாவட்டம், பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 29). இவருக்கும், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் வைத்தீஸ்வரிக்கும் திருமணம் முடிந்து கீழக்கவட்டாங்குறிச்சி புதுக்காலனி தெருவில் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்படவே கணவரிடம் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வைத்தீஸ்வரி சென்று விட்டாராம். இதனால், ஆத்திரத்தில் இருந்த பாக்கியராஜ் நேற்று மாலை தனது வீட்டை தானே தீ வைத்து கொளுத்தினார். இந்த தீ அவரது வீட்டிற்கு அருகே இருந்த சுசீலா(65) என்பவரின் வீட்டுக்கும் பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீைர பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தபோதும் இருவரது வீட்டிலும் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story