நகராட்சி-பேரூராட்சிகளுக்கு தலைவர்-துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் தேர்வு


நகராட்சி-பேரூராட்சிகளுக்கு தலைவர்-துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் தேர்வு
x
தினத்தந்தி 24 Feb 2022 1:00 AM IST (Updated: 24 Feb 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி-பேரூராட்சிகளுக்கு தலைவர்-துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் தேர்வு செய்யப்பட்டனர்

பெரம்பலூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.
பெரம்பலூர் நகராட்சி தலைவர் தேர்வு
இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விரைவில் கொண்டு வரப்படும். பெரம்பலூர் மக்களுக்கு தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களையும், தொண்டர்களையும் மதிக்க வேண்டும். தோல்வியடைந்தவர்களை கட்சி கை விடாது என்றார். விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், பெரம்பலூர் நகராட்சிக்கு தலைவராக 11-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்பிகா ராஜேந்திரனும், 20-வது வார்டில் வெற்றி பெற்ற ஹரிபாஸ்கர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பேரூராட்சி
இதேபோல் குரும்பலூர் பேரூராட்சி தலைவராக 11-வது வார்டில் வெற்றி பெற்ற சங்கீதா ரமேசும், துணைத் தலைவராக 9-வது வார்டில் வெற்றி பெற்ற கீதா ராஜேந்திரனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அரும்பாவூர் பேரூராட்சி தலைவராக 7-வது வார்டில் வெற்றி பெற்ற வள்ளியம்மை ரவிச்சந்திரனும், துணைத் தலைவராக 1-வது வார்டில் வெற்றி பெற்ற சரண்யா குமரனும், பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக 15-வது வார்டில் வெற்றி பெற்ற பாக்கியலட்சுமி செங்குட்டுவனும், துணை தலைவராக 7-வது வார்டில் வெற்றி பெற்றவரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான செல்வலட்சுமி சேகரும், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு தலைவராக 4-வது வார்டில் வெற்றி பெற்ற ஜாகீர் உசேனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி துணைத் தலைவர் பதவி கூட்டணி கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, பிரபாகரன், க.சொ.க. கண்ணன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க.வினர் அம்பேத்கர், காந்தி, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளான மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்ட 3 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட்ட 2 வார்டுகளிலும், ம.தி.மு.க. போட்டியிட்ட ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மறைமுக தேர்தல்
நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வருகிற 2-ந்தேதி பதவி ஏற்க உள்ளனர். நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு 4-ந் தேதி மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிகள் தி.மு.க. கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மறைமுக தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிகிறது.


Next Story