அறுவடை எந்திரம் மோதி விவசாயி சாவு


அறுவடை எந்திரம் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 24 Feb 2022 1:06 AM IST (Updated: 24 Feb 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

மெலட்டூர் அருகே அறுவடை எந்திரம் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

மெலட்டூர்:- 

மெலட்டூர் அருகே அறுவடை எந்திரம் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். 

அறுவடை பணி

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள ஏர்வாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது55). விவசாயி. நேற்று இவர் அங்கு உள்ள வயலில் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எந்திரம் மூலம் அறுவடை பணி நடந்தது. வீரமணி, வயல் வரப்பு ஓரமாக இருந்த நெற்கதிர்களை கம்பால் ஒதுக்கி கொண்டிருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக அறுவடை எந்திரம் வீரமணி மீது மோதியது. 
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வீரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் வீரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
அறுவடை எந்திரம் மோதி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story