வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி உள்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது
வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி உள்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், பென்னாத்தூர், திருவலம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா ஆகிய பேரூராட்சிகளுக்கு பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் 5 மையங்களில் எண்ணப்பட்டன.
வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 44 இடங்களை தி.மு.க. வென்றது. 7 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.
குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகளில் 21 வார்டுகளில் தி.மு.க.வென்றது. 10 இடங்களை மட்டுமே அ.தி.மு.க. கைப்பற்றியது. பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க. வென்றது. ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க. வெற்றி பெறவில்லை.
பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 இடங்களை தி.மு.க.வும், 2 இடங்களை அ.தி.மு.க.வும் கைப்பற்றியது. திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 9 இடங்களையும், அ.தி.மு.க. 5 இடங்களையும் பிடித்தது. இதேபோல ஒடுகத்தூரில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 13 இடங்களிலும் அ.தி.மு.க. 2 இடங்களையும், பள்ளிகொண்டாவில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 14 இடங்களையும் அ.தி.மு.க. ஒரு இடத்தையும் பெற்றது.
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் தி.மு.க. 123 இடங்களில் வென்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றியது. மேலும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் சில இடங்களை வென்றுள்ளது.
Related Tags :
Next Story