ஜோலார்பேட்டை அருகே நெல் அறுவடை எந்திரம்- பஸ் மோதி விபத்து; டிரைவர் பலி
ஜோலார்பேட்டை அருகே நெல் அறுவடை எந்திரம்- பஸ் மோதிக்கொண்ட விபத்தில் நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவர் பலியானார். 55 பயணிகள் காயமின்றி தப்பினர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே நெல் அறுவடை எந்திரம்- பஸ் மோதிக்கொண்ட விபத்தில் நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவர் பலியானார். 55 பயணிகள் காயமின்றி தப்பினர்.
பஸ்- நெல் அறுவடை எந்திரம் மோதல்
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 25). இவர் நேற்று காலை புத்துக்கோயில் பகுதியில் விவசாய நிலத்தில் நெல் அறுவடை எந்்திரம் மூலம், அறுவடை செய்துவிட்டு மதியம் 3.30 மணியளவில் ஜோலார்பேட்டை செல்லும் சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
ஜோலார்பேட்டை- புத்துக்கோயில் சாலையில் கேத்தாண்டபட்டி ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது, ஜோலார்பேட்டையில் இருந்து புத்துகோயில் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்தது. இதில் 55 பயணிகள் இருந்தனர். பஸ்சை கிருஷ்ணகிரியை அடுத்த போச்சம்பள்ளி சின்னபரண்டபள்ளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கார்த்தி (31) ஓட்டிவந்தார்.
டிரைவர் பலி
அப்போது தனியார் பஸ்சும், நெல் அறுவடை வாகனமும் மோதிக்கொண்டன. இதில் பஸ்சில் முன்பகருதி சேதமடைந்தது. நெல் அறுவடை எந்திரத்தை ஓட்டிச்சென்ற விக்னேஷ் குமார் படுகாயம் அடைந்தார். அவரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் தனியார் பஸ் டிரைவர் கார்த்தியும் காயமடைந்தார். ஆனால் பஸ்சில் இருந்த 55 பயணிகளும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பயணிகளை மாற்றி பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
மேலும் தனியார் பஸ் டிரைவர் கார்த்தி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story