நெல்லை, தென்காசியில் மேலும் 7 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது மற்றும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 62 ஆயிரத்து 169 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 97 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 445 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம்
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது. நேற்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரத்து 725 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 32 ஆயிரத்து 203 பேர் வீடு திரும்பி உள்ளனர். 32 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 490 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story